சிம் ஆன்: ஹோட்டல்களில் பாதுகாப்பு வலுப்பட வேண்டும்

உலகின் பல பகுதிகளில் ஹோட்- டல் கள் மீது பயங்கரவாதத் தாக்கு- தல்கள் நடைபெறும் நிலையில் சிங்கப்பூரிலுள்ள ஹோட்டல்கள் ஆக அண்மைய தொழில்நுட்பம், மேம்பாடுகளுடன் ஹோட்டல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார். "ஒவ்வோர் ஆண்டும் 200 மில்லியன் பயணிகள் சிங்கப்பூரில் எல்லைகளைக் கடக்கின்றனர். இதில் எவருமே சிங்கப்பூரின் இடர்காப்பு, பாதுகாப்பு குறித்து தவறான நோக்கம் கொண்டிருக்க வில்லை என்று சொல்ல முடியாது," என்று வர்த்தகம் தொழில், கலா- சாரம் சமூகம் இளையர் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கூறினார். ஹோட்டல் இடர்காப்பு, பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பேசிய அவர், 2009 ஜூலையில் ஜகார்த்தாவின் மாரி- யோட், ரிட்ஸ்கால்ட்ரன் ஹோட்டல் களில் நடந்த தாக்குதல்களைக் குறிப்பிட்டார். ஜமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் நடத்திய அந்தத் தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் மாண்டனர், 50 பேர் காயமடைந்தனர். "இத்தகைய தாக்குதல்கள் இங்கு நடைபெறவில்லை என்பதை சிங்கப்பூரின் அதிர்ஷ்டமாகக் கொள்ளலாம். ஆனால் இங்கு இது நடக்காது என நாம் கருதக்கூடாது," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!