போலி போலிஸ் அழைப்பு மோசடி

போலியான போலிஸ் அழைப்பு மோசடி பற்றி போலிஸ் எச்சரித்துள்ளது. 1800-=255=000 என்ற போலிசின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் பலருக்கு அழைப்புவிடுத்துள்ளதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலிஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரித்துள்ளது. போலிசின் அழைப்பு எண்ணான 1800-=255=000 என்ற எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்ணை உங்கள் தொலைபேசியில் காணமுடியாது.

இந்தக் குற்றங்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதற்காக இந்த எண் பயன்படுகிறது. எனவே இதுபோன்ற கைத்தொலைபேசி எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று போலிஸ் தனது அறிக்கையில் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அழைப்பவரின் எண்ணை மாற்றிக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் இதுபோன்ற அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலிஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இதுபோன்ற போலி அழைப்பு மோசடிச் சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது 999 என்ற எண் மோசடிக்காகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் தகவலறிய www.police.gov. sg/iwitness என்ற இணையத் தளத்திற்குச் செல்லலாம், அல்லது அவசர உதவி தேவைப்பட்டால் 999 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!