கவச வாகன வழக்கு: ஹாங்காங் நீதிமன்றத்தில் ஜூன் 6ல் விசாரணை

சிங்கப்பூர் ஆயுதப்படைக்குச் சொந்தமான ஒன்பது கவச வாகனங்களை ஹாங்காங் கடல் எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது போன்ற குற்றங்களுக்காக அந்த வாகனங்களை ஏற்றி வந்த கப்பலின் தலைவர் 39 வயது சீன நாட்டவரான பான் ஸுயுஜுன் என்பவர் மீதும் அந்த கப்பல் நிறுவனமான ஏபிஎல் கம்பெனி லிமிடெட் மீது ஹாங்காங் வழக்குத் தொடுத்துள்ளது. அந்தக் கவச வாகனங்கள் சென்ற ஆண்டு நவம்பர் 23 முதல் ஹாங் காங்கில் தடுத்து வைக்கப்பட்டன. பின்னர் ஜனவரி 30ஆம் தேதி அந்தக் கவச வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.