இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி: ஜூன் 1ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், 31, சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக மனீஷ் பாண்டே விலகியதையடுத்து அந்த வாய்ப்பு கார்த்திக்கைச் சென்றடைந்தது. பத்தாவது ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் லயன்ஸ் அணி வெளியேறிவிட்டபோதும் அவ்வணி வீரரான கார்த்திக் 361 ஓட்டங்களைக் குவித்தார். முன்னதாக இவ்வாண்டு நடந்த விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் இரு சதங்கள், நான்கு அரைசதங்கள் உட்பட ஒன்பது ஆட்டங்களில் 607 ஓட்டங்களையும் தியோதர் கிண்ணத் தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், ஓர் அரைசதம் உட்பட 247 ஓட்டங்களையும் அவர் குவித்தார். இந்த இரண்டு கிண்ணங்களையும் தமிழக அணி வென்றது குறிப்பிடத் தக்கது. இதற்குமுன் கார்த்திக் 23 டெஸ்ட், 71 ஒருநாள், ஒன்பது டி20 போட்டிகளில் இந்திய அணியைப் பிரதிநிதித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!