அரங்கம் முழுவதும் குளிரூட்டி வசதி; அசத்தும் கத்தார்

தோகா: கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்க இன்னும் 2,022 நாட்கள் இருந்தாலும் இப்போதே ஒரு விளையாட்டரங்கம் முழுமை யாகத் தயாராகிவிட்டது. தலைநகர் தோஹாவில் உள்ள காலிஃபா அனைத்துலக அரங் கில் 40,000 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம். 1976ல் கட்டப்பட்ட இந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சிறுதுளைகளைக் கொண்ட 500 குழாய்கள் குளிர்ந்த காற்றைப் பீய்ச்சும் வகையில் அரங்கம் முழுமைக்கும் குளிரூட்டி வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த விளையாட்டரங்கை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்த்த முன்னாள் ஸ்பானிய வீரரும் பார்சிலோனா அணித் தலைவருமான ஸாவி ஹெர் னாண்டஸ், அது மிகவும் அற்புத மாக இருப்பதாகப் பாராட்டினார். இதற்கிடையே, கத்தாரின் மிகப் பெரிய உள்ளூர் காற்பந்துத் தொடரான எமிர் கிண்ணத்தின் இறுதிப் போட்டி நேற்று அந்த அரங்கில் இடம்பெறவிருந்தது. இதில் ஸாவியின் தலைமை யிலான அல் சாட் அணி, அல் ரயான் அணியுடன் பொருத இருந்தது.