இன்றுடன் விடைபெறும் காற்பந்துப் பிரபலங்கள்

பெர்லின்: தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல் நிலை ஜெர்மானிய காற்பந்து லீக்கான புண்டஸ்லீகா பட்டத்தை வென் றிருக்கும் பயர்ன் மியூனிக் குழு, இன்று இரு காற்பந்துப் பிரபலங் களுக்குப் பிரியாவிடை கொடுக்க இருக்கிறது. அக்குழுவின் தலைவரும் ஜெர்மானியருமான ஃபிலிப் லாம், 33, ஸ்பெயின் வீரர் ஸாபி அலோன்சோ, 35, ஆகிய இருவரும் இந்தப் பருவத்துடன் தொழில்முறைக் காற்பந்தில் இருந்து விலகுவதாக ஏற்கெ னவே அறிவித்துவிட்டனர். அவ்வகையில், ஃப்ரீபர்க் குழுவுடன் பயர்ன் குழு இன்று மோதும் ஆட்டமே அவர்களுக்குக் கடைசி ஆட்டம். உலகக் கிண்ணம், சாம்பி யன்ஸ் லீக், யூரோ கிண்ணம், லீக் பட்டம் என அவ்விருவரும் சாதிக்காத தொடர்களே இல்லை. 2005 சாம்பியன்ஸ் லீக் தொடரை லிவர்பூல் குழு வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார் அலோன்சோ. 2009ல் ரியால் மட்ரிட் குழுவிற்கு இடமாறிய அவர், பின் 2014 முதல் பயர்ன் குழுவிற்காக ஆடிவருகிறார். ஸ்பெயினுக்காக அவர் 114 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2002 முதல் பயர்ன் குழுவிற் காக விளையாடிவரும் ஃபிலிப் லாமின் தலைமையிலான ஜெர் மானியக் குழு 2014ல் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. லாம் 113 அனைத்துலக ஆட்டங் களில் விளையாடி இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!