லெஸ்டர்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் நாளையுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் அதிக கோலடித்தவருக் கான தங்கக் காலணி விருதைக் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கி றார் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் ஹேரி கேன் (படம்). கிங் பவர் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத் தில் கேன் நான்கு கோல்களையும் தென்கொரியாவின் சன் ஹியூங் மின் இரு கோல்களையும் அடிக்க, 6=1 என்ற கணக்கில் ஸ்பர்ஸ் குழு, லெஸ்டர் சிட்டி குழுவைப் புரட்டியெடுத்தது. செல்சி குழு ஏற்கெனவே பட் டத்தைக் கைப்பற்றிவிட்ட நிலை யில், இரண்டாமிடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவிற்கு இந்த ஆட் டத்தின் முடிவால் எந்தப் பலனும் இல்லை.
ஆயினும், தனிப்பட்ட சாதனைகளுக்கு இந்த ஆட்டம் வாய்ப்பளித்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், 26 கோல்களை அடித்து இந்தப் பருவத்தில் அதிக கோலடித்தோர் வரிசையில் முதலிடத்திற்கு முன் னேறினார் கேன். ரொமேலு லுகாகு (24, எவர்ட்டன்), அலெக்சிஸ் சான்செஸ் (23, ஆர்சனல்) ஆகி யோர் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இருக்கின்றனர். ஆகையால், ஹல் சிட்டிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இன்னும் கோல்களை அடித்து தங்கக் காலணியைத் தன்வசப் படுத்தும் முனைப்புடன் இருக் கிறார் கேன்.