அட்லாண்டாவில் தடுத்து வைக்கப்பட்ட பயனி

வா‌ஷிங்டன்: கடந்த வாரம் அமெரிக்க சுங்கவரி அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட 56 வயது இந்தியர் அட்லாண்டா மருத்துவமனையில் இறந்துவிட்டார். அமெரிக்காவுக்கு வந்து இற்ங்கிய அவரிடம் தேவையான குடிநுழைவு ஆவணங்கள் இல்லாததால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. மே 10ஆம் தேதி அட்டுல் குமார் பாபுபாய் பட்டேல் ஈக்வேடாரில் இருந்து வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இறந்தார்.