காதலிப்பதால் என் திரை வாழ்க்கையில் பாதிப்பில்லை - சமந்தா

நாக சைதன்யாவைக் காதலிப்பதால் என் திரை வாழ்க்கை, காதல் வாழ்க்கை இரண்டும் பாதிக்கப்படவில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், 'பெண்கள் மன அமைதியைக் கெடுப்பவர்கள்' என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மன அமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். திரையில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு. "நாக சைதன்யா மனம் நிறைய நான்தான் இருக்கிறேன். எனக்கும் அவருக்குமான காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காதலால் எனது நடிப்புத் தொழில் சிறிதும் பாதிக்கவில்லை. நடிப்பு மீதுள்ள காதலும் குறையவில்லை. நடிப்பு என்பது எனது உயிர் போன்றது. பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நான் நடித்துக்கொண்டு இருக்கவில்லை. அதன்மீது இருக்கும் காதலால் நடிக்கிறேன். "திரைக்கும் எனக்கும் நல்ல பந்தம் இருக்கிறது. நடிகையாக இருக்கும் இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது எண்கிறார் சமந்தா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!