‘தனுஷ், சூர்யாவுடன் நடிக்க ஆசை’

திரைத்துறைக்கு வந்த குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு ஒரு மனக்குறை இருந்துகொண்டே இருக்கிறதாம். அது என்னவென்றால் நடிகர் சூர்யா, தனு‌ஷுடன் இணைந்து நடிக்கவில்லை என்பதுதானாம். அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காகக் காத்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'ஜீவா', 'காக்கி சட்டை', 'வெள்ளைக்காரதுரை', 'இஞ்சி இடுப்பழகி', 'பென்சில்', 'மருது' உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா திரைக்கு வந்துள்ள 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து 'ஒத்தைக்கு ஒத்த' படத்திலும் நடித்து வருகிறார். அவர் நடித்த சில படங்களின் தோல்வி காரணமாக அவரது திரை வாழ்க்கை தற்பொழுது சரிவைக் கண்டுள்ளது.

இதுபற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், "திரையில் ஒரு படம் ஓடினால் பரபரப்பாகப் பேசுவார்கள். இரண்டு படம் ஓடவில்லையென்றால் அவரை ஒதுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படக்கூடாது. தற்போது 'ஈட்டி' படத்திற்குப் பிறகு அதர்வாவுடன் நான் நடித்துள்ள 'ஒத்தைக்கு ஒத்த', ஜீவாவுடன் நடித்துள்ள 'சங்கிலி புங்கிலி கதவ தொற' ஆகிய இரண்டு படங்களும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அதனால் இந்தப் படங்கள் வெளியாகும்போது மீண்டும் நான் பரபரப்பான நடிகையாகி விடுவேன். நான் நடிகையானபோது இத்தனை படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைக்கவேயில்லை. என் வாழ்க்கையில் நான் நினைக்காதது எல்லாமே நடக்கின்றன. தொடர்ந்து எல்லா நடிகர்களுடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. முக்கியமாக சூர்யா, தனுஷ் எனக்குப் பிடித்தமான நாயகர்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!