இந்தோனீசிய படகு விபத்தில் ஐவர் பலி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 200 பேர் பயணம் செய்த படகில் தீ மூண்டதால் குறைந்தது ஐந்து பேர் இறந்து விட்டனர் என்று அந்நாட்டின் மீட்புப் படை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆர்சிபிளகோவின் முக்கிய ஜாவா தீவுக்கு அருகே படகு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் படகின் தலைவர், படகைவிட்டு அனைவரும் வெளியேற உத்தரவிட்டார் என்று தேசிய பேரிடர் முகவை குறிப்பிட்டது. 141 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டன. மின் கசிவு காரணமாக தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!