கோலாலம்பூர்: கோலாலம்பூர் மருத்துவமனையில் நோயாளிகளோடு நோயாளியாக மருத்துவருக்காகக் காத்திருந்த மலேசிய அமைச்சரின் படம் அதிவேகத்தில் சமூக ஊட கங்களில் பரவி வருகிறது. அந்தப் படத்தில் காணப்பட்டவர் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் முஸ்தபா முஹமட். மருத்துவமனையில் மற்ற நோயாளிகளோடு இருக்கையில் அமர்ந்து அவர் காத்திருந்தார். இந்தப் படத்தை ஆளும் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் ஆதரவாளர் ஒருவர், மே 16ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து புகைப்படத்தை விரும்புவதாக 1,500க்கும் மேற் பட்டோர் குறிப்பிட்டிருந்தனர். மேலும் 534 பேர் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்திருந்த னர். இதன் தொடர்பில் மலேசியா வின் 'த ஸ்டார்' நாளேடு அமைச் சருடன் தொடர்பு கொண்டு விவரம் கேட்டது. அதற்குப் பதில் அளித்த அமைச்சர், மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்திருந்த தாகத் தெரிவித்தார்.
மருத்துவமனையில் பின்பக்க இருக்கையில் (வெள்ளை நிறச்சட்டை) அமர்ந்திருந்த அமைச்சர் முஸ்தபா முஹமட். படம்: த ஸ்டார்