ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரௌஹானி வெற்றி

டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரௌஹானி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனை அந்நாட்டின் அதி காரபூர்வ தொலைக்காட்சி நேற்று அறிவித்தது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்தலில் ஏறக் குறைய 40 மில்லியன் பேர் வாக்களித்தனர். அவர்களில் பாதிக்கு மேற் பட்டவர்களின் வாக்குகளை பெற்று திரு ஹசன் ரௌஹானி வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் இன்னமும் சில இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. திரு ரௌஹானி ஒரு மித வாதி. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு வரம்புகளை நிர்ணயிக்கும் உலக வல்லரசு நாடுகளுடன் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால் பொதுமக்களில் ஒரு பகுதியினர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் அவர் தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால் இவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிரக் கொள் கையாளர் இப்ராஹிம் ரைசி, தேர்தலில் முறைகேடுகள் நடந் துள்ளதாகக் குற்றம் சாட்டியுள் ளார்.

திரு ஹசன் ரௌஹானி உலக அரங்கில் தமது மிதமான கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!