சவூதி அரேபியாவில் டிரம்ப்

வா‌ஷிங்டன்: சொந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் தமது முதல் வெளிநாட்டு பயணத்தை நேற்று தொடங்கினார். சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வந்து சேர்ந்த திரு டிரம் ப்பையும் அவரது மனைவி மெல னியாவையும் மன்னர் சல்மான் அன்போடு வரவேற்றார். அதிபர் டிரம்ப்பின் எட்டு நாள் பயணத்தில் இஸ்ரேல், பாலஸ் தீனம், புருஸ்ஸல்ஸ், வட்டிகன், சிசிலி ஆகிய வட்டாரங்கள் இடம் பெற்றுள்ளன. சவூதி அரேபியா பயணத்தில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் அவர் கையெழுத் திடுவார் என்று நேற்று வெளி யானத் தகவல்கள் தெரிவித்தன. மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமையை அதிரடியாக நீக்கியதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் வேளையில் திரு டிரம்ப்பின் பயணம் தொடங்கியுள்ளது.

ரியாத் நகரில் அதிபர் டிரம்ப்புக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அருகில் மன்னர் சல்மான். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!