‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்

உலகம் முழுவதும் 100க்கு அதிகமான நாடுகளில் உள்ள கணினிகளை ஆக்கிரமித்து பணம் பறிக்கும் 'வானாகிரை' வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு ஒன்றை பிரெஞ்சு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான், இந்தோனீசியா, தைவான் உள் ளிட்ட சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த 300,000 கணினிகள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட கணினித் தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கிய கணினிகளில் உள்ள தகவல் களைப் பயன்படுத்த இயலாதபடி 'லாக்' செய்துவிடும். 'பிட்காயின்' எனப்படும் பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பிய பிறகு தாக்குதலில் இருந்து அந்தக் கணினி விடுவிக்கப்படும்.

'வானாகிரை' மூலம் பணம் பறிக்கும் கும்பலின் வங்கிக் கணக்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகமான கணினிகள் பாதிக்கப்பட்டிருப் பதால் பல நிறுவனங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 'வானாகிரை' வைரஸைப் பரப்பிய கும்பல் இதன் மூலம் பலகோடி ரூபாய்களைச் சம்பாதித் திருக்கலாம் என்று பலரும் பேசிவரும் வேளையில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் சேர்ந்திருப்பது 32 லட்சம் ரூபாய்தான் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரெஞ்சு பாதுகாப்பு ஆய்வாளரான ஏட்ரியன் குய்னெட் 'வானாகிரை' கணி னித் தாக்குதலுக்கான ரகசியக் குறிப்புத் தகவலை அறியும் முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது. இந்த 'வானாகிரை' கணினி வைரஸ் தாக்குதலின்போது உருவாக்கப்படும் பொது, தனிப்பட்ட குறியீடுகள் 'பிரைம்' எண்களின் அடிப்படையிலானவை என்று திரு குய்னெட் குறிப்பிட் டுள்ளார். 'வானாகிரை' தாக்குதலின் போது உருவாக்கபப்டும் அந்த 'பிரைம்' எண் கணினியிலிருந்து நீக்கப்படாமல் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். அதைக்கொண்டு தான் 'வானாகிரை' தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கான குறி யீடுகளை அவரால் உருவாக்க முடிந்தது.

அவர் உருவாக்கிய 'வானாகீ' எனும் செயலி தாக்குதலிலிருந்து விடுவிப்பதற்கு இரண்டு பிரைம் எண்களைக் கொண்டு குறியீடு களை உருவாக்குகிறது. இந்த 'வானாகீ' செயலி 'விண்டோஸ் எக்ஸ்பி', 'விண் டோஸ் 7', 'விண்டோஸ் விஸ்டா', 'விண்டோஸ் சர்வர்' 2003, 2008 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் செயல் படும். 'வானாகிரை'யால் பாதிக்கப்பட்டு மீண்டும் 'ரீபூட்' செய்யப் படாத கணினிகளில் மட்டுமே இந்தத் தீர்வு செயல்படும்.

திரு குய்னெட் கண்டுபிடித்த முறையின் அடிப்படையில் மற்றொரு பாதுகாப்பு ஆய்வாளரான பெஞ்சமின் டெல்பி 'வானாகிவி' எனும் மற்றொரு தீர்வையும் கண்டுபிடித்துள்ளார். 'பிட்காயின்' எனப்படும் பணம் எதுவும் கொடுக்காமலேயே 'வானாகிரை' தாக்குதலில் இருந்து விடுபட இந்தப் புதிய தீர்வும் வழிவகுக்கிறது. இந்தச் செயலியை இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். 'வானாகிவி' செய லியை 'ஜிட்ஹப்' இணையப்பக்கத் தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். 'விண்டோஸ் எக்ஸ்பி', 'விண் டோஸ் 7', 'விண்டோஸ் விஸ்டா', 'விண்டோஸ் சர்வர்' 2003, 2008 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் பயன் படுத்தலாம். இந்தத் தீர்வுகளால் பல நிறுவனங்கள் நிம்மதி அடைந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!