மூன்று மாத பணிகள் நிறைவு: தியோங் பாரு சந்தை திறப்பு

தியோங் பாரு சந்தை மற்றும் உணவு நிலையம் மூன்று மாத புதுப்பிப்புக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பிரபலமான உணவு நிலையம் பழுதுபார்க்கவும் மறு அலங்காரத்திற்காகவும் புதுப்பிப்புப் பணிகளுக்காகவும் பிப்ரவரி 20ஆம் தேதி மூடப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. எரிசக்தியைச் சிக்கனப்படுத்தும் விளக்குகள், பெரிய மின்விசிறிகள், சூரிய வெப்பத்தை மறைக்கும் தகடுகள் எல்லாம் அங்கு புதிதாக பொருத்தப்பட்டு இருக்கின்றன. நிலையத்துக்குப் புதிதாக சாயம் அடிக்கப்பட்டு இருக்கிறது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கு வசதியாக இடம் விட்டு இடம் நகர்த்தக்கூடிய இருக்கைகள் அங்கு போடப்பட்டு இருக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!