மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது மாது புகார்

மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய 69 வயது தந்தையைத் தாக்கிவிட்டதாக ஒரு மாது போலிசில் புகார் தெரிவித்து இருக்கிறார். குற்றவாளியைப் பிடிக்க உதவும்படி மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். தன் தந்தை மே 18ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணிக்கு சாலை யைக் கடந்து சென்றபோது மின் ஸ்கூட்டரில் வந்த ஆடவர் ஒருவர் தன் தந்தையைத் தாக்கியதாக ஹுய் யிங் என்ற பெண்மணி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். மின்ஸ்கூட்டரில் வந்தவர் வேக மாக வந்ததாகவும் தன்னுடைய தந்தை எடுத்துச் சென்ற ஒரு பிளாஸ்டிக் பை எதிர்பாராதவித மாக அந்த வாகன ஓட்டியின் தலைக்கவசத்தில் உரசிவிட்ட தாகவும் மாது குறிப்பிட்டார்.

அதனையடுத்து வண்டியை நிறுத்திய அந்த மின்ஸ்கூட்டர் ஓட்டி, தன் தந்தையை அடித்த தாகவும் அப்போது அங்கிருந்தவர் களில் இரண்டு பேர் உதவிக்கு ஓடி வந்ததாகவும் அவர் சொன் னார். போலிசை அழைக்கப் போவ தாக திருவாட்டி ஹுய் யிங்கின் தந்தை கூறியதை அடுத்து அந்த மின்ஸ்கூட்டர் ஆசாமி ஓடிவிட்டார். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு தன்னுடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் காயங் களுக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த மாது குறிப்பிட்டார். முதியவரைத் தாக்கிய அந்த நபர் இன்னும் சிக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் 69 வயது ஆடவர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். படம்: ஃபேஸ்புக்/ ஹுய் யிங்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!