தமிழக அரசை நேரடியாகவே இயக்குவோம்: எச்.ராஜா வெளிப்படை

கோவை: தமிழக அரசை மறைமுகமாக இயக்க வேண்டிய அவசியம் பாரதிய ஜனதாவுக்கு இல்லை என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், அவசியம் ஏற்படும் பட்சத்தில் தமிழக அரசை பாஜக நேரிடையாகவே இயக்கும் என்றார். “தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்காது. அத்தகைய நோக்கம் எங்களுக்கு இல்லை. “அதே சமயம் தமிழகத்தில் சாதகமான சூழலைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடிக்க முற்படும். அதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சில் ஈடுபடுவோம்,” என்று எச்.ராஜா கூறினார். தமிழகத்தில் பாஜக அரசின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ராஜா இவ்வாறு பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.