பாஜக இந்தியைத் திணிக்கிறது கோவை: ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் இன்றைய தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கூழைக் கும்பிடு போடுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கருத் தரங்கு ஒன்றில் பேசிய அவர், இனி எக்காலத்திலும் தாம் இந்தி மொழியைக் கற்கப் போவதில்லை என்றார். " நாடாளுமன்றத்துக்குப் போகும்போது நானும் அங்குள்ள சூழலில் இந்தி கற்றுக்கொள்ள லாம் என்ற நம்பிக்கையோடுதான் போனேன். ஆனால், 'இந்தி தெரிந் தால்தான் நீ இந்தியன்' என்ற சூழலை எதிர்கொண்டபோது, இனி என்ன ஆனாலும் அந்த மொழியைக் கற்றுக்கொள்வ தில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
"இந்தி நமது தேசிய மொழி அல்ல. 22 ஆட்சி மொழிகளில் இந்தியும் ஒன்று. இதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட் டது," என கனிமொழி சுட்டிக் காட்டினார். மத்திய அரசு தொடர்ந்து இந்தியைத் திணித்து வருவதாகச் சாடிய அவர், நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி, கடிதம் எழுதி னால் இந்தியில் பதில், இந்தியி லேயே மத்திய அரசின் அறிவிப்பு களை வெளியிடுதல், இந்தி மொழி யில் அரசாணைகள் என அனைத் திலும் இந்தி திணிப்பு நிகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார். "பேஸ்புக், ட்விட்டர்,
வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள்கூடத் தமிழுக்கு முக்கியத்துவம் தருகின் றன. ஆனால் மத்திய அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிப் பது இல்லை. மாறாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கட்டாயம், கல்லூரிகளில் இந்தித் துறை என மத்திய அரசு தொடர்ந்து இந்தித் திணிப்பு வேலையில் ஈடுபடுகிறது," என்று கனிமொழி குற்றம்சாட்டி னார். தமிழர்கள் இந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை என் றும் அது தங்கள் மேல் திணிக் கப்படுவதைத்தான் எதிர்க்கிறார் கள் என்றும் குறிப்பிட்ட அவர், தமிழர்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்றார். "லத்தீன் செம்மொழியைப் பேசு வதற்கு ஆளில்லை. சமஸ்கிருதம் செம்மொழியாக இருந்தாலும் வழி பாட்டுக்கு மட்டுமே பயன்படுகிறது. பேசுவதற்கு ஆளில்லை," என்றார் கனிமொழி.