டாஸ்மாக் போராட்டம்: பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதா?

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை காவல்துறை தாக்கியது கடுமை- யான கண்டனத்திற்குரியது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். மதுவை விற்று நிர்வாகம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. அதற்காக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை மதிக்காமல் அப்பாவி மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக ராமதாஸ் கூறினார். அறவழியில் போராடும் மக்கள் மீது அடக்குமுறையைக் கட்ட- விழ்த்து விடுவது கண்டிக்கத்தக்- கது என்றும் அவர் கூறினார். "வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரு கிலுள்ள அழிஞ்சிக் குப்பம் கிரா மத்தில் ஏற்கெனவே ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. "நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட மற்றொரு மதுக் கடையை அழிஞ்சிக்குப்பத்தில் டாஸ்மாக் நிர்வாகம் திறந்துள்ளது. "இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர்.

சனிக்கிழமை அழிஞ்சிக் குப்பத் தில் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி போராடிய பெண் களில் ஒருவரைக் காவல்துறை அதிகாரி ஒருவர் மூர்க்கத்தனமாக அடித்து அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்துச் செல்கிறார். படம்: தினத்தந்தி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!