குரல் மாதிரியைப் பதிவுசெய்ய தினகரன் மறுப்பு

சென்னை: இரட்டை இலைச் சின்னம்பெற தேர்தல் ஆணை- யத் திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறும் வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தனது குரல் மாதிரி- யைப் பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தின கர னும் சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவுகள் டெல்லி காவல்துறை வசம் உள்ளன. அவை உண்மைதானா என்பதைக் கண்டறியும் பொருட்டு, தினகரனின் குரல் மாதிரியைப் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி காவல் துறை யினர் மனுத் தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்- றத்தில் தினகரன் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குரல் மாதிரியைப் பதிவு செய்ய நீதிமன்றம் அனு- மதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தினகரன், அங்கு குரல் மாதிரி யைப் பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குரல் மாதிரி- யைப் பதிவு செய்ய இடமில்லை என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.