சென்னை: அரசியலில் கால் பதிக்கும் ரஜினி, காவிரி பிரச்சி னைக்குத் தீர்வு காண்பார் என அவரது நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர் நம்பிக்கை தெரிவித் துள்ளார். அரசியல் களம் குறித்த ரஜினி யின் அண்மைய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளன. அவர் தனிக்கட்சி தொடங்கு வாரா? பாஜகவில் இணைவாரா? என்றெல்லாம் பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரசிகர்கள் மகிழும் வகையில் நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வரப் போவது நூறு விழுக்காடு உறுதி என அவரது நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார். அடுத்த சில தினங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தன் கட்சியில் தமது குடும்பத்தாருக்கு அவர் இடம ளிக்க மாட்டார் என்றும் ராஜ்பகதூர் குறிப்பிட்டுள்ளார். "ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார். அவரை வாழவைத்த தமிழ்நாட்டுக்கு நன்மை செய்வார். அவர் அரசியலுக்கு வருவது நூறு விழுக்காடு உண்மை.
"இந்த மாத தொடக்கத்தில் அவரது குடும்ப உறுப்பினருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்ள பெங்களூர் வந்தார் ரஜினி. அப்போது அவரிடம் இது குறித்து கேட்டேன். மேலும் அரசி யல் என்பது சற்று கடினமாயிற்றே? சமாளிப்பீர்களா என்றேன். அதற்கு அவர், அரசியலில் நிலைப்பது குறித்து கடந்த 25 ஆண்டுகளில் நிறைய புரிந்து, அறிந்துகொண்ட தாகத் தெரிவித்தார்," என்றார் ராஜ் பகதூர். அரசியலில் நுழையும்பட்சத்தில் ரஜினி தனிக்கட்சிதான் தொடங்கு வார் என்றும் காவிரி பிரச்சினைக் குத் தீர்வு காண்பார் என்றும் குறிப்பிட்ட அவர், ரஜினி முதல்வரா னால் அனைத்து பிரச்சினைகளுக் கும் தீர்வு காணமுடியும் என்றும் தெரிவித்தார். வெறும் சட்டப்பேரவை உறுப்பி னராகவோ, அமைச்சராகவோ தேர் வானால் ரஜினியால் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்று சுட்டிக் காட்டிய ராஜ்பகதூர், இக்காரணத் தால் ரஜினி யாருடனும் கூட்டணி அமைக்கமாட்டார் எனவும் கூறியுள்ளார்.