காவல்துறை திடீர் எச்சரிக்கை

சென்னை: ஈழப் படுகொலை நினைவேந்தலுக்குப் பல்வேறு தரப்பினரும் காவல்துறையில் அனுமதி கோரி உள்ளனர். இந்நிலையில் அத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவதாக உள்ள சென்னை, கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடுபவர்கள் கைது செய்யப்படுவர் என போலிசார் அறிவித்துள்ளனர். “மெரினா கடற்கரையில் விதிமுறைகளை மீறி கூடினாலோ, கூட்டம் நடத்த முற்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் அழகைப் பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.