மரக்கன்றுகளுக்காகத் தயாராகும் மூங்கில் கூடைகள்

மரங்கள் நடுவது குறித்தும், சுற்றுச்சூழலைக் காப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மரக்கன்றுகளைப் பாது காக்க இரும்புக் கம்பிகளால் வேலி அமைப்பதைவிட, மூங்கிலால் செய்யப்பட்ட நாற்றுக்கூடைகளை நடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின் றனர். 3 அடி தொடங்கி 6.5 அடி உயரம் வரையுள்ள இந்தக் கூடைகள் ரூ.60 முதல் ரூ. 160 வரை விற்கிறது. இதில் 6.5 அடி உயரக் கூடை ஒரு நாற்று வளர்ந்து மரம் ஆகும் வரை பயனளிக்கும் வகையில் இருக்கும்,” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். படம்: ஊடகம்