அனன்யா ரவிச்சந்திரன்
அஷ்வினியின் விருப்பம் அவர் நினைத்ததைவிட முன்னதாகவே நிறைவேறியுள்ளது. ஆம். படித்து முடித்ததும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பயின்ற அஷ்வினி மனிதவள நிர்வாகப் படிப்பிலும் உளவியல் படிப்பிலும் இவ்வாண்டு பட்டயம் பெற்றுள்ளார். 'எட்வாண்டேஜ் கன்சல்டிங்' குழுமத்தில் வேலைப் பயிற்சியை முடித்த அஷ்வினி, 19, பகுதி நேர வேலைக்கு அதே நிறுவனத்தில் சேர்ந்தார். படிப்பை முடித்த ஒரே வாரத்தில் அதே நிறுவனத்தில் முழுநேர வேலையும் கிட்டியதில் மகிழ்ச்சியில் திளைக்கிறார் இவர். அஷ்வினியின் பெற்றோர் இருவரும் பணிபுரிந்தாலும் அவர் கள் வயதானவர்கள் என்பதால் அவர்களுடைய மத்திய சேமநிதிக் கணக்கில் போதிய பணம் இல்லை. அஷ்வினியின் பள்ளிக் கட்ட ணத்தை முழுமையாகக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பகுதிநேர வேலைக்குச் சென்று பணத்தைச் சேமித்து படிப்பைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடித் தார் அஷ்வினி. அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடிய தனது பண்புக்கேற்ப இந்தப் படிப்பைத் தேர்வு செய்த தாகச் சொன்னார் அவர்.
பணிபுரிந்து பணம் சேர்த்து மனிதவளத் துறையில் பட்டக்கல்வி மேற்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ளார் அஷ்வினி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்