விளையாட்டு பயிற்றுவிப்பாளராக இலக்கை எட்டிய கபிலன்

இளம் வயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம்கொண்ட ரா.கபிலன் நாயுடு, அத்துறையில் பயிற்றுவிப்பாளராக விரும்பி இலக்கை வகுத்து அதனை எட்டிப்பிடித் திருக்கிறார். உயர்நிலைப் பள்ளியில் காற்பந் துக் குழுவிலும் திடல்தடக் குழுவிலும் இடம்பெற்ற அவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம் விளையாட்டுப் பயிற்றுவிப்பிலும் பரவத் தொடங்கியது. அந்த ஆர்வமே அவரை அத்துறையில் பட்டயப் படிப்பையும் மேற்கொள்ளத் தூண்டியது. அண்மையில் ரிபப்ளிக் பல துறைத் தொழிற்கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் படிப்பில் பட்டயம் பெற்றார் கபிலன். வழக்கநிலைத் தேர்வு முடிந்த பிறகு 'ஃபேபியன் வில்லியம்ஸ் கோச்சிங் கோன்செப்ஸ்' என்னும் உடல் உறுதி பயிற்சிப் பயிலகத்தில் அனைத்து வயதினருக்கும் உடல் உறுதிப் பயிற்சி அளித்து வேலை அனுபவம் பெற்றார். அதனை நடத்தி வந்த திரு ஃபேபியன் வில்லியம்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கபிலனுக்கு திடல்தடப் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தார்.

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!