பிரியங்காவின் விருப்பத் தேர்வு கலைத்துறை

இருபது வயதிலும் கேலிச்சித்திரக் கதைகள், காணொளிகளை விரும்பிப் பார்க்கிறார் பிரியங்கா ரவிச்சந்திரன். இளம் வயதிலிருந்தே கேலிச் சித்திரங்களின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு, அந்தத் துறையில் பட்டயக் கல்வி பயிலும் அளவுக்கு அவரிடையே வேர்விட்டது. உயர்நிலைப் பள்ளியில் முழுமையாக அறிவியல் சார்ந்த பாடங்களைப் படித்த பிரியங்கா, பலதுறைத் தொழிற்கல்லூரியில் கலை சார்ந்த படிப்பினை மேற்கொள்ளப்போவதாகச் சொன்ன போது அவரது தந்தை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரியங்காவின் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட பிறகு அவரது விருப்பத்துக்குத் தடையாக இருக்க வில்லை அவரது பெற்றோர். நீ ஆன் பலதுறைத் தொழிற்கல் லூரியில் கேலிச்சித்திரம், முப்பரிமாணக் கலையில் பட்டயக் கல்வி படிப்பை மேற்கொண்டு இவ் வாண்டு பட்டயம் பெற்ற மாணவர்களிடையே ஒரே இந்திய மாணவியாக இருந்தார் பிரியங்கா ரவிச்சந்திரன். தொடக்கப்பள்ளிக்குப் பிறகு பிரியங்காவால் படம் வரைவதில் நேரம் செலவிட முடியவில்லை. பள்ளிப்பாடங்கள், துணைப்பாட வகுப்புகள் போன்ற நடவடிக்கை களிலேயே கவனத்தையும் நேரத் தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது.

தமது குழு உருவாக்கிய கேலிச்சித்திர குறும்படத்தின் ஒரு காட்சியுடன் கூடிய கணினித் திரையின் பின்னணியில் பிரியங்கா. படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!