$15மி. பிஎஸ்பி நகர பயிலகம் திறப்பு

சிங்கப்பூரின் தலைசிறந்த தனியார் கல்வி நிறுவனமான பிஎஸ்பி அகடமி, மரினா ஸ்குவேரில் 100,000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் $15 மில்லியன் செலவில் தனது நகர வளாகத்தைத் திறந்து இருக்கிறது. தேசிய தொழிற்சங்கக் காங்கிர சின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அந்தப் புதிய வளாகத்தைத் திறந்துவைத்தார். சிங்கப்பூரின் தொழில்துறை உருமாற்ற வழிகாட்டித் திட்டங்களை நிறைவேற்றத் தேவைப்படும் தேர்ச்சிகளை ஊழியர்களிடத்தில் உருவாக்கும் வகையில் புதிய பாட செயல்திட்டங்களை அமல்படுத்துவது இந்தப் புதிய வளாகத்தின் நோக்கம். இந்தப் பயிலகம், நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தொழில்துறை மற்றும் சேவைத் துறை ஊழியர்கள் சங்கத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டது. ஊழியர்களுக்குக் கல்வி உப காரச் சம்பளம் கிடைக்க இந்த உடன்பாடு வகை செய்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் இந்தப் பயிலகத்திலும் அமெரிக்கா, ஆஸ் திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு பல்கலைக்கழகங்களி லும் உயர்கல்வியைத் தொடர 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த உடன்பாடு ஆதரவு தரும்.

பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் (வலமிருந்து 2வது), பிஎஸ்பி அகடமியின் $15 மில்லியன் நகர வளாகத்தை நேற்று திறந்துவைத்தார். ஊழியர்களின் தேர்ச்சி மேம்படவும் அவர்கள் மறுபயிற்சி பெறவும் முறையான உயர்கல்வியைத் தொடரவும் இந்தப் பயிலகம் உதவுகிறது. பிஎஸ்பி பயிலகத்தின் நிர்வாகத் தலைவர் விவேகானந்தன் சின்னையா (இடது) உடன் இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!