டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இஸ்ரேலியர், பாலஸ்தீனர் அமைதிக்கு ஆன அனைத்தும் செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார். பாலஸ்தீன தலைவர் மஹ்முட் அப் பாசை சந்தித்த திரு டிரம்ப், பயங்கர வாதத்துக்கு எதிராக போராட தேவை யான நடவடிக்கைகளை எடுக்க அப்பாஸ் கடப்பாடு கொண்டுள்ள தாகவும் கூறினார். மூன்று ஆண்டு களாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ் தீனர்களுக்கும் இடையே அமைதி பேச்சு நடைபெறவில்லை. இது ஒரு கடினமான பேச்சு வார்த் தையாக இருக்கும் என்பதை அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார். மத்திய கிழக்குக்கு மேற்கொண்ட பயணத்தின் கடைசி கட்டமாக அதிபர் டிரம்ப் நேற்று மேற்கு கரை பகுதிக்கு வந்தார். முன்னதாக இஸ்ரேலுக்கு வருகையளித்த அவர் அங்கு இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்தார்.
இதற்கிடையே காசா, ஆக்கிர மிக்கப்பட்டுள்ள மேற்கு கரை பகுதிகளில் டிரம்ப்புக்கு எதிராக வும் இஸ்ரேலிய சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன கைதி களுக்கு ஆதரவாகவும் பாலஸ் தீனர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். கடந்த திங்கட்கிழமை பேசிய அதிபர் டிரம்ப், இந்த வட் டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டு வர இது அருமையான வாய்ப்பு என்று கூறியிருந்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிபர் டிரம்ப்பும் பாலஸ்தீனத் தலைவர் மஹ்முட் அப்பாசும் இணைந்து பதில் அளித்தனர். படம்: ஏஎஃப்பி