மான்செஸ்டர் தாக்குதலுக்கு சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. "அப்பாவி மக்கள் இறப்பதற் கும் காயம் அடைவதற்கும் காரணமான வெடிகுண்டு தாக்கு தலை வன்மையாகக் கண்டிக் கிறோம்," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரி வித்தது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆழ்ந்த அனுதாபங் களைத் தெரிவித்த அமைச்சு, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டது. முதன்முதலில் அனுதாபம் தெரிவித்த தலைவர்களில் ஒரு வரான சீன அதிபர் ஸி ஜின்பிங், அப்பாவி மக்கள் மரண மடைந்ததற்கு மிகவும் வருந்து வதாகத் தெரிவித்தார்.
இந்தச் சிரமமான காலகட்டத்தில் பிரிட் டனுக்கு சீனா உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித் தார். "தாக்குதலை நடத்தியவர்கள் 'தோற்றுப்போன தீய சக்திகள்' என்று வருணித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், "பிரிட் டனின் ஒருமைப்பாட்டுக்கு பக்க பலமாக இருப்போம்," என்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மான்செஸ்டர் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.