சுடச் சுடச் செய்திகள்

நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி புகார்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவியே போலிசில் புகார் அளித்திருப்பது திரையுலகிலும் சின்னத்திரை வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் கணவர் சாதி பெயரைச் சொல்லி ஏசுவதாகவும் அடிப்பதாகவும் பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வேறு சில விஷயங்களில் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.