போலி பட்டம்: இரானிக்கு எதிராக புதிய மனு தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தில் போலி கல்விச் சான்றிதழைத் தாக்கல் செய்ததாக குற்றச் சாட்டு எழுந்த விவகாரத்தில் ஸ்மிரிதி இரானி மீது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிரிதி இரானி. இவர் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக முன்னர் பதவி வகித்து வந்தபோது தனது கல்விச் சான்றிதழ் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அளித்த 3 பிரமாணப் பத்திரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல் களைத் தெரிவித்து இருப்பதாகக் கூறி அமெர்கான் என்ற எழுத்தாளர் சார்பில் டெல்லி மெட்ரோலிபாலிடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மனு தாக்கலின்போது ஸ்மிரிதி இரானி பி.ஏ. பட்டப் படிப்பை தான் டெல்லி பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம் முடித்ததாக கூறி இருந் தார். 2011ஆம் ஆண்டு டெல்லி மேல் மன்றத் தேர்தலுக்காகப் போட்டியிட்டபோது, டெல்லி பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம் பி.காம். படித்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். 2014ல் அமேதி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தபோது, தான் டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி கல்வி முறையில் பி.காம். படித் துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!