தனக்கு ஏற்ற மாதிரியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் அருள்நிதி கெட்டிக்கார மனிதராக உள்ளார். தற்போது, ராதாமோகன் இயக்கத்தில் அவரும் தான்யாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'பிருந்தா வனம்' வெளியீடு காண உள்ளது. வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் இப்படத்தை தயாரித் துள்ளார். இதில் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசைய மைக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ராதா மோகன். 'மொழி', 'அபியும், நானும்', 'பாலைவனம்' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் இவர்.
"முதலில் 'பிருந்தாவனம்' என்றாலே அங்கு ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும், குதூகலம் காணப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அது போன்ற கதை என்பதால் இதற்கு 'பிருந்தாவனம்' என்று பெயர் வைத்திருக்கிறோம். இது ஊட்டி யில் நடக்கும் கதை. "அருள்நிதி காது கேட்காத, வாய் பேச முடியாத இளையராக, சவாலான வேடத்தில் நடித்திருக்கி றார். விவேக் நடிகராகவே வரு கிறார். கதைப்படி அருள்நிதி அவருடைய ரசிகர். இருவரும் நண்பர்களாக இந்தப் படத்தில் வருகிறார்கள். "கதாநாயகி தான்யா புதுமுகம் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கி றார். மேலும், அருள்நிதி முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்க ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.
'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி, தான்யா