“ஓடி ஓடி உழைக்கிறேன்”

கவர்ச்சி நாயகியாக வலம் வருவதில் தமக்கு எந்த வகையிலும் உடன்பாடில்லை என்கிறார் இளம் நாயகி ரெஜினா. அவ்வாறு நடிப்பது தமக்குப் பிடிக்கவில்லை என்றும், தமது முழுத் திறமையையும் வெளிப் படுத்தக் கூடிய வாய்ப்புள்ள வேடங்களை மட்டுமே விரும்புவதாகவும் அவர் சொல்கிறார். 'கண்ட நாள் முதல்' மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகிய ரெஜினா, 'கேடி பில்லா கில்லடி ரங்கா' படத்தின் மூலம் பிரபலமாகினார்.

பின்னர் ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்தி ருந்தாலும், அண்மையில் வெளியான 'மாநகரம்', 'சரவணன் இருக்க பயமேன்' உள்ளிட்ட படங்கள் இவரைப் பற்றி ரசிகர்களை அதிகம் பேச வைத்திருக்கிறது.

தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'ராஜ தந்திரம் 2' உள்ளிட்ட படங்கள் ரெஜினா கைவசம் உள்ளன. தவிர, பல புதிய படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

ரெஜினாவின் பூர்வீகம் குறித்து அறியாத வர்களுக்காக சிறு குறிப்புகள். இவரது தாய் கன்னடம். தந்தை வட இந்தியர். பாட்டியோ ஆங்கிலோ-இந்தியப் பெண்மணி. தாத்தா மட்டும் தமிழ். அதனால் தம்மை தமிழ்ப் பெண் எனத் தயக்கமின்றிச் சொல்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா.

சரி... சினிமா விவகாரங்களுக்கு வருவோம். தமிழில் ஏன் அதிகம் நடிப்பதில்லை?

"என்ன செய்வது? தெலுங்கில் நிறைய படங்களை ஒப்புக் கொண்டுவிட்டேன். அதனால் மற்ற மொழிப் படங்களில் அதிகம் நடிக்க முடிய வில்லை. இனிமே அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இனி என்னைத் தமிழ்ப் படங்களில் அடிக்கடிப் பார்க்கலாம்.

"செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் 'நெஞ்சம் மறப்பதில்லை', அதர்வாவுடன் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', அப்புறம் 'ராஜதந்திரம் 2', 'மடை திறந்து', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என தமிழில் நான் ரொம்ப பிஸி.''

"சிவகார்த்திகேயன், உதயநிதி, அதர்வா, எஸ்.ஜே.சூர்யா என தமிழிலும், தெலுங்கிலும் நிறைய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனாலும் என்னைப் பற்றி எந்தக் கிசுகிசுக்களுமே வந்ததில்லை. இது எப்படி சாத்தியம்? என்று கேட்கிறார்கள்.

"எல்லாருமே எனக்கு நல்ல, சக கலைஞர்களாக அமைந்தனர். எல்லோரிடமும் நல்ல நட்பில் இருக்கிறேன், அவ்வளவுதான். கிசுகிசு வர வேண்டுமானால், படப்பிடிப்பையும் கடந்து வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும் அல்லவா?

"எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. இரவு பகலாக படப்பிடிப்பிலேயே இருக்கிறேன். எனக்கென தனிப்பட்ட வாழ்க்கை என ஏதேனும் உள்ளதா எனத் தெரியாத அளவுக்கு நடிப்பி லேயே முழுக் கவனமும் இருக்கிறது. அந்தளவு ஓடிஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் ரெஜினா. ஏதோ போன வருடம்தான் ரெஜினா நடிக்க வந்தது போல் இருக்கிறது. அதற் குள் 25 படங்களை முடித்துவிட்டாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!