வகுப்புகளில் மெய்நிகர் பள்ளிச் சுற்றுலாக்கள்

வகுப்புகளில் இருந்தவாறு மெய் நிகர் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி தொடக்கப்பள்ளி மாண வர்கள் பள்ளிச் சுற்றுலாக்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வியாழக்கிழமையன்று வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த தொடக்கநிலை நான்கு மாணவர்கள் மெய்நிகர் பள்ளிச் சுற்றுலா ஒன்றை மேற் கொண்டனர். அதில் பால் பண்ணை ஒன்றையும் நடுக்கடலில் இருக்கும் மீன் பண்ணையையும் அவர்கள் வகுப்பில் இருந்தவாறு வலம் வந்தனர். மெய்நிகர் காணொளியைக் காட்டும் சாதனங்களை அணிந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் மாணவர்கள் பல இடங்களுக்கு ‘சுற்றுலா’ மேற்கொண்டனர். கல்விப் பயன்பாட்டுக்காக மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த சோதனைத் திட்டத்தில் வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி ஈடுபட்டது. இந்தச் சோதனைத் திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இம்மாதம் துவக்கத்தில் நிறைவு பெற்றது.