போலிச் செய்தி எதிர்ப்பு: 2 நாள் கருத்தரங்கு

போலிச் செய்திகள் எதிர்ப்பு தொடர்பாக அடுத்த மாதத்தில் இரண்டு நாட்களுக்குக் கருத்தரங்கு நடத்தப்படும். இந்தக் கருத்தரங்கு அடுத்த மாதம் 19, 20ஆம் தேதிகளில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத் தின் சட்டப் பள்ளிக் கட்டடத்தில் நடைபெறும். இதில் போலிச் செய்திகள் பரவுவதை எதிர்கொள்வது, ஆசியாவில் ஊடக ஆற்றலை மேம்படுத்துவது ஆகியவை குறித்து செய்தியாளர்கள், நூல் பதிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் கலந்துரையாடுவர். கருத்தரங்கில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் உரையாற்றுவர். கருத்தரங்கின் இரண்டாவது நாளன்று மூன்று பயிலரங்குகள் நடத்தப்படும். இந்தப் பயிலரங்குகளில் ஊடக ஆற்றல் திட்டங்கள்,- விதிமுறை கட்டமைப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடப்படும். உலகளவில் போலிச் செய்திகள் பரவி வருவது நம்பகமான ஊடகத்துறையின் தேவையை வலியுறுத்துவதாக சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.