அவசர சிகிச்சை வழங்க ஆயுதப் படை மருத்துவ உதவியாளர்கள்

வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து மூன்று மாத அறிமுகத் திட்டமாக சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவ உதவியாளர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ்களில் பணியாற்றுவர். சிங்கப்பூரர்களின் மருத்துவத் தேவைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் சேவைகள் பொது மக்களுக்கான அவசர சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய திட்டம் இலக்கு கொண்டுள்ளது. சிங்கப்பூரின் மக்கட்தொகை மூப் படைந்து வருகிறது.

எனவே ஆம்பு லன்ஸ் சேவைகள், பொது மக்களுக்கான அவசர சிகிச்சைகள் ஆகியவற்றுக்கான தேவை ஒவ்வோர் ஆண்டும் ஆறு விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று தெரிவித்தார். "சிங்கப்பூருக்கு வெளியிலிருந்து வரும் மிரட்டல்களை எதிர்கொண்டு நாட்டைத் தற்காப்பதே சிங்கப்பூர் ஆயுதப் படையின் முதன்மை இலக்கு. ஆனால் பொதுமக்களுக்கான அவசர சிகிச்சைகளுக்கு ஆயுதப் படையின் மருத்துவ உதவியாளர்களைப் பயன் படுத்துவது பொதுமக்களுக்கும் ஆயதப் படைக்கும் பலனளிக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!