தனியார் வாடகை கார்கள் எண்ணிக்கை 70 மடங்கு அதிகரித்துள்ளது

'உபர்', 'கிராப்' ஆகிய தனியார் வாடகை கார்களின் பயன்பாடு சிங்கப்பூரில் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திலிருந்து அது இந்த ஆண்டு கிட்டத்தட்ட 70 மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது இங்கு 41,297 தனியார் வாடகை கார்கள் உள்ளன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 2013ல் அந்த இரு தனியார் வாடகை கார்கள் அறிமுக மானபோது 500க்கும் குறைவான கார்களே இருந்தன. அதற்கு முன் தனியார் வாடகை கார்களை சொகுசு கார் நிறுவனங்களே வைத்திருந்தன.

2015ல் 10,000ஐத் தாண்டி கடந்த ஆண்டில் 30,000ஐத் தாண்டி கடந்த மாத இறுதி யில் 41,297ஐத் தொட்டது. இது மொத்த டாக்சிகளின் எண்ணிக்கையான 26,476ஐ காட்டிலும் 56% அதிகம். கடந்த ஆண்டில் மட்டும் 21,894 தனியார் கார்கள் தனியார் வாடகை கார்களாக மாற்றப்பட்டன. ஆனால், அவை பின்னர் தனியார் கார்களாக தன்னை மாற்றிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்பதால் இந்த விதிகத் தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆணையம் கூறியது.

தனியார் வாடகை கார்களின் வணிகம் நீண்ட காலத்துக்குத் தாக்குபிடிக்க முடியாது என்று வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 'கிராப்' நிறுவனம் எஸ்எம் ஆர்டி டாக்சி வணிகத்தை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரி வித்திருப்பதே இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. டாக்சிகளே நீண்ட காலத்துக்குத் தாக்குபிடிக்கக்கூடியவை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!