சிஓஇ கட்டணங்கள் குறைந்தன

நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று நடத்திய வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான ஏலக்குத்தகையில் கட்டணங் கள் பெரும்பாலான பிரிவுகளில் இறக்கம் கண்டன. 1,600 சிசிக்கு உட்பட்ட கார்களுக்கான சிஓஇ கட்டணம் $51,106லிருந்து சரிந்து $46,489 ஆனது. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $55,414ல் இருந்து $53,001க்கு இறங்கியது. பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் $55,000ல் இருந்து குறைந்து $52,000 ஆனது. மோட்டார்சைக்கிள் களுக்கான சிஓஇ கட்டணம் $6,301லிருந்து $6,101க்கு இறங்கியது. வர்த்தக வாகனங்களுக்கான சான்றிதழ் கட்டணத்தில் மட்டும் ஏற்றம் தென்பட்டது. அதில் கட்டணம் $26,029லிருந்து $30,600க்கு உயர்ந்தது.