வேறுபாடுகளைவிட பொது ஈடுபாடுகளே அதிகம்

அமைதியான, வளர்ச்சிகாணும் வட்டாரத்தை உருவாக்குவதில் சிங்கப்பூரும் சீனாவும் கொண்டு உள்ள பொதுவான ஈடுபாடு, இரு நாடுகளுக்குமிடையில் அவ்வப்போது எழக்கூடிய கருத்து வேறுபாடுகளைவிட அதிகம் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையில் பரந்த, நீண்டகால உறவு நிலவுவ தோடு, பெரும்பாலான விவகாரங் களில் ஒருமித்த கருத்துகள் இருப்பதாகவும் பொதுவான ஈடு பாடுகளில் ஒன்றுசேர்ந்து சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும் திரு டியோ கூறினார்.

"நாடுகளின் அளவும், வரலாறு, பலவீனங்கள், புவியியல் அமை விடம் போன்றவையும் வெவ்வேறாக இருக்கும் நிலையில், நெருங்கிய அண்டைவீட்டார்களுக்கும் நண்பர் களுக்கும் இடையிலும் கூட சில விவகாரங்களில் மாறுபட்ட கருத் துகள் இருக்கக்கூடும்," என்றார் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ. "உருமாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில் சீனா" என்ற தலைப் பிலான பொது கருத்தரங்கில் அவர் பேசினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுக் கழகம் அதன் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்தது. சிங்கப்பூரும் சீனாவும் அடிப்ப டையில் தத்தம் நாடுகள் மற்றும் வட்டாரத்தின் அமைதியான வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பொதுவான ஈடுபாடு கொண்டு உள்ளன, இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் திரு டியோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!