துரைமுருகன்: மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்

மதுரை: தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்க அக்கட்சி யினர் தேவையில்லை என்றும் அதிமுகவினரே போதும் என் றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே பிரதமர் மோடிக்கு வாய்த்துள்ள சிறந்த அடிமைகள் என விமர்சித்தார். “அதிமுக ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என்று கணித்துச் சொல்ல எனக்கு அரசியல் ஆரூடம் தெரியாது. அனுப வத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் அதிபர் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கு ஒரு முடிவு வந்து விடும்.

“நாங்கள் எதிர்க்கட்சி. எங்களால் முடிந்தவரை, எங்கள் உடலில் பலமிருக்கும் வரை ஓரிரு இடங்களில் குளங்களைத் தூர் வாருகிறோம். ஆனால், தமிழக அரசிடம் பணம் உள் ளது. சொன்னால் செய்வதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். அதற்கென்று ஓர் அமைச்சர் இருக்கிறார். இதுவரையில் அரசு சார்பில் எத்தனை குளங்கள் தூர் வாரப்பட்டன?” என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதிபர் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களத்தில் பல் வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர், நடிகர் ரஜினி உட்பட யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வர லாம் என்றார். அரசியலுக்கு வர எந்தவித கல்வித் தகுதியும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்