கங்கனாவின் இயக்குநர் அவதாரம்

பொதுவாக இந்தி நடிகைகளில் பலர் தங்கள் மனதில் தோன்றும் எத்தகைய கருத்துகளையும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்தக்கூடியவர்கள். அவர்களில் கங்கனா ரணவத்துக்கும் நிச்சயம் முதன்மையான இடமுண்டு. தனது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதிலும், இந்தித் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் கங்கனா என்றால், அதற்கு அவரது நடிப்புத் திறமையே காரணம் என்கிறார்கள் திரை விமர்சகர்கள். இந்நிலையில், தனது திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்ட நகர்வைத் தைரியமாக மேற்கொண்டுள்ளார் கங்கனா. விஷயம் இதுதான்.

கங்கனாவின் அடுத்த அவதாரம் திரைப்பட இயக்குநர். ‘தேஜூ’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்போது ‘சிம்ரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் கங்கனா. இது, செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை ஹன்சன் மேத்தா இயக்கி இருக்கிறார். இதையடுத்து தனது முதல் படத்தை இயக்குகிறார் கங்கனா. “மிக விரைவில் திரைப்பட இயக்குநராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்கப்போகின்றன. அடுத்த ஆண்டு வெளியீடு ஆகும். இதில் முதல் முறை யாக நான் 80 வயதுப் பெண்ணாக நடிக்கிறேன். “இது முழுக்க முழுக்க முதியவர் களைப் பற்றிய படம். இதில் தனது வயதைப் பற்றிக் கவலைப்படாமல் சுறு சுறுப்பாக இருக்கும் பெண்ணாக நான் நடிக்கிறேன்,” என்கிறார் கங்கனா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா. அதனால் மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் என்று சூர்யாவை பாராட்டிய நடிகர் ரஜினி காந்த், இளையர்கள் தமிழின் சிறப்பு குறித்து நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். கோப்புப்படம்

23 Jul 2019

'இளையர்கள் தமிழின் சிறப்பை அறிந்திருக்க வேண்டும்'

‘நுங்கம்பாக்கம்’ படத்தில் நடித்துள்ள புது முகங்கள் மனோ, ஐரா. படம்: ஊடகம்

23 Jul 2019

எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது ‘நுங்கம்பாக்கம்’