சமுத்திரக்கனியின் தொண்டன்

சமுத்திரக்கனி இயக்கம், நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தொண்டன்’ படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது. இப்படத்தை வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மணிகண்டன், நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இதுவரை நிறைய வெற்றிப் படங்களுக்கு விநியோகிப்பாளராகப் பணியாற்றிய மணிகண்டன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.