டிரம்ப்பிடம் போப்: அமைதிக்கு உதவுங்கள்

வத்திகன்: போப்பாண்டவர், தம்மை சந்திக்க வந்த டிரம்ப்பிடம் உலகில் அமைதியை ஏற்படுத்த உதவுங்கள் வேண்டுகோள் விடுத் துள்ளார். மத்திய கிழக்குப் பயணத்தை முடித்துக் கொண்ட அதிபர் டிரம்ப், போப்பாண்டவரைச் சந்திப்பதற்காக நேற்று வத்திகன் நகருக்கு வந்து சேர்ந்தார். போப்பாண்டவரைச் சந்திக்க மூன்றாவது மாடிக்கு இட்டுச் செல்லும் சிறிய மின்தூக்கியில் நுழைந்த அவர், பின்னர் பாதை யெங்கும் வழங்கப்பட்ட சடங்கு பூர்வ வரவேற்பை ஏற்றுக்கொண் டார். தனிப்பட்ட அறையின் நுழை வாயிலில் நின்று கொண்டிருந்த போப்பாண்டவரின் கைகளைப் பற்றி திரு டிரம்ப் குலுக்கினார். அப்போது போப்பாண்டவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புகைப்படக்காரர்கள், செய்தி யாளர்கள் முன்னிலையில் இரு வரும் அமர்ந்தனர்.

போப்பாண்டவர் ஆலிவ் மர சிற்பத்தை பரிசாக வழங்க, பதிலுக்கு திரு டிரம்ப், மார்ட்டின் லூதர் கிங்கின் ஐந்து முதல் பதிப்புகளை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன் டிரம்ப்பின் மனைவி மெலானியா. படம்: ஏஎஃப்பி இறந்தவர்களுக்கு அஞ்சலி மத்திய மான்செஸ்டரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் மலர் வளையங்களையும் பூக்களையும் வைத்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் ஆண்டறிக்கையை வாசிக்கும் அதிபர் ஜோக்கோ விடோடோ. படம்: இபிஏ

17 Aug 2019

தலைநகர் இடமாற்றத்திற்கு ஆதரவு கோரும் ஜோக்கோவி

புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகை குண்டைப் பயன்படுத்தினர்.
படம்: ராய்ட்டர்ஸ்

17 Aug 2019

ஹாங்காங் போலிஸ்: சீனா தலையிட வேண்டியதில்லை