கிரிக்கெட்: மலேசியாவை வீழ்த்தியது சிங்கப்பூர்

உகாண்டா: மலேசியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டி யில் சிங்கப்பூர் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. உகாண்டாவில் நடை பெற்று வரும் உலகக் கிரிக்கெட் லீக் டிவிஷன் 3ன் போட்டி யில் சிங்கப்பூர் அணி நேற்று முன்தினம் விளையாடியது. மழை காரணமாக 50 ஓவர் போட்டி, 45 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில், பூவா தலையா வென்ற சிங்கப்பூர் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பந்தடிக்கத் தொடங்கிய மலேசியா, 35.3 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 4.4 ஓவர்களை வீசிய அனிஷ் பராம் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் பந்தடிக்கத் தொடங்கிய சிங்கப்பூர் அணியின் முதல் விக்கெட் விரைவில் வீழ்ந்தது. ஆனால் அடுத்து வந்த அனிஷ் பராம் நிலைத்து நின்று அடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை பலப்படுத்தினார். அடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிங்கப்பூர் அணித்தலைவர் சேத்தன் சூர்யசன்சி களம் இறங்கினார். அவர் 17 பந்துகளில் 19 ஓட்டங்களை விளாச, சிங்கப்பூர் அணி 31.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நடைபெறவுள்ள போட்டியில், சிங்கப்பூர்- மெரிக்கா அணிகள் மோதுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்