கபடி: ₹ 73 லட்சத்திற்கு ஏலம் போன தமிழக வீரர்

புதுடெல்லி: புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 5வது பருவம், வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை எட்டு அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலை யில், இப்பருவத்தில் கூடுதலாக நான்கு அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. சென்னை, அரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய அணி கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதற்கான ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 60 பேர் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்ட வர்கள் இடம் பெற்றனர். இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நிதின் தோமர் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை ரூ.93 லட்சம் கொடுத்து உத்தரப் பிரதேச அணி வாங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம் பகாபட் மாலிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான அவர் முன்னேறிச் சென்று தாக்குவதில் சிறந்தவர்.

அவருக்கு அடுத்தப்படியாக ரோகித் குமாரை ரூ.81 லட்சம் கொடுத்துப் பெங்களூர் அணியும் மஞ்சித் சில்லாரை ரூ.75.5 லட்சம் கொடுத்து ஜெய்ப்பூர் அணியும் வாங்கியது. சேலத்தைச் சேர்ந்த தமிழக வீரர் கே.செல்வமணியை (படம்) ரூ.73 லட்சம் கொடுத்து ஜெய்ப்பூர் வாங்கியது. பெங்கால் அணி காஜித்சிங் என்பவரை ரூ.73 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. சென்னை அணியைக் கிரிக் கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாங்கி உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon