சாதனை படைக்க காத்திருக்கும் வெங்கர்

லண்டன்: ஆர்சனலின் நிர்வாகி வெங்கர் 7 முறை எஃப்ஏ கிண் ணம் வென்ற முதல் இங்கிலிஷ் நிர்வாகி என்ற சாதனை படைக்கும் நோக்கில் அதன் இறுதிப் போட்டிக்கு ஆர்சனலைத் தயார் படுத்தி வருகிறார். ஆனால், பிரிமியர் லீக் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் உள்ள செல்சி, அதை இரட்டிப்பாக்கும் நோக்கில் எஃப்ஏ கிண்ணப் பட்டத்தையும் வெல்ல ஆர்வமாக உள்ளது. சாம்பியன்ஸ் லீக், பிரிமியர் லீக் என அனைத்து பட்டங்களையும் கோட்டைவிட்ட ஆர்சனல் இந்த பருவத்தில் வெறும் கையோடு செல்லாமல் இருக்க வேண்டு மானால், அதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு செல்சியை வீழ்த்தி எஃப்ஏ கிண்ணத்தை வெல்வது மட்டுமே. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் செல்சியை 3-0 என ஆர்சனல் தனது மண் ணில் வீழ்த்தியது. ஆனால், அதற்கு பழி தீர்க்கும் விதமாக அடுத்த ஆட்டத்தில் 1-3 என ஆர்சனலை வீழ்த்தியது செல்சி. தொடர்ந்து எதிரணி மண்ணில் தோல்வியைச் சந்தித்து வருவது ஆர்சனலுக்கு பெரும் பின்னடைவாகும்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணியும் கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்தும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாரா கணித்திருக்கிறார். படம்: ஏஎப்பி

19 Oct 2019

லாரா கணிப்பு: கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

அரை சதம் அடித்த சிங்கப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேந்திரன் சந்திரமோகன். படம்: ஐசிசி

19 Oct 2019

2019 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று: சிங்கப்பூர் பேரெழுச்சி