தமிழர்களின் அடையாளங்களை பாஜக அரசு அழிக்க முற்படுகிறது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் இந்தி மொழி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் திமுக மகளிர் அணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி னார். “தமிழர்களுக்கு எனத் தனி அடையாளம் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக் கிறது என்று கனிமொழி சாடியுள்ளார். மேலும் திமுக இந்தி திணிப்பை மட்டும் எதிர்க்க வில்லை. தமிழர்களின் கலாசாரம், கல்வி, மொழி, மதம் என அனைத் தையும் பாழ்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

அவற்றுக்கெல்லாம் திமுகவே எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது,” என்றார். தமிழர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்தால் தோல்விதான் மிஞ்சும். கைத்தொலைபேசி, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இன்றி, இனி மனிதனால் வாழ முடியாது. “இவையெல்லாம் மனிதர்க ளைச் சிந்திக்கத் தூண்டு கின்றன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயல்கிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர் கள் அதிகமானோர் மருத்துவர் களாக உள்ளனர் எனில், அதற்கு முக்கிய காரணம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக் கீடுதான். ‘நீட்’ தேர்வு எழுதினால்தான் மருத்துவராக முடியுமா? தமிழகத்திற்குத் தற் போது ‘நீட்’ தேர்வுக்கு என்ன அவசியம் வந் துள்ளது. இந்தியா ஒருங்கிணைந்த தேசம் என்று பாஜகவினர் கூறு கின் றனர்.

ஆனால் கர்நாடகா, கேரளாவில் தண்ணீர் கேட்கும் போது மாநிலப் பிரச்சினை என்று கூறுகின்றனர். விவசாயிகளைச் சந்திக்க பிரதமர் மறுக்கிறார். மத்திய அரசு தமிழக விவசாயி களின் பிரச்சினைகளைச் சிந் திக்கக்கூட மறுக்கிறது. தமிழகத்தில் இந்தி மொழி யைத் திணித்தால் கண்டிப்பாக புரட்சி வெடிக்கும்,” என எச்சரித்தார். மொழிக்காக பல்வேறு நாடு களில் போராட்டம் நடந்திருக் கும். ஆனால் தமிழகத்தில்தான் தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்து உள்ளனர். பாஜக ஆட் சிக்கு வந்ததில் இருந்து அரசின் அறிவிப்புகளை இந்தியில் அறி விக்கின்றனர். “இந்தி நமது தேசிய மொழி அல்ல. 22 ஆட்சி மொழிகளில் இந்தியும் ஒன்று. இதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட் டது,” என கனிமொழி சுட்டிக் காட் டினார்.

“தேர்வுகளையும் இந்தியில் நடத்து கின்றனர். தமிழக மேடைகளில் கூட ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசுகின்றனர் பாஜக பிரமு கர்கள். “இது அனைவருக்கும் ஏற்றதாக இல்லை. இது முற்றிலும் கண்டிக் கத்தக்கது,” என்று கனிமொழி பேசினார். மத்திய அரசு தொடர்ந்து இந்தியைத் திணித்து வருவதாகச் சாடிய அவர், நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி, மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதினால் இந்தியில் பதில், இந்தியிலேயே மத்திய அரசின் அறிவிப்புகளை வெளியிடுதல், இந்தி மொழியில் அரசாணைகள் என அனைத்திலும் இந்தி திணிப்பு நிகழ்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.

திமுக மகளிர் அணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.