சுடச் சுடச் செய்திகள்

‘அமெரிக்காவுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளப்போவதில்லை’

லண்டன்: மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் போலிசார் இனிமேல் விசாரணை தொடர்பிலான தகவல் களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. அந்த விசாரணை தொடர்பான தகவல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலிசார் இவ்வாறு கூறியுள்ளனர். விசாரணைத் தகவல்களை அமெரிக்கா கசியவிட்டது தொடர்பில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தமது அதிருப்தியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் தெரிவிப்பார் என்று தெரிகிறது. பிரசல்ஸ் நகரில் நேற்று தொடங்கிய நேட்டோ கூட்டத்தில் கலந்துகொள்ளும் திருவாட்டி மே, அதே கூட்டத்தில் கலந்துகொள்ளும் திரு டிரம்ப்பிடம் அதுபற்றி பேசுவார் என்று பிபிசி தகவல்கள் கூறுகின்றன.

விசாரணைத் தகவல்களை அமெரிக்கா கசியவிட்டது பிரிட்டிஷ் போலிசார் மேற்கொள்ளும் விசாரணையை சீர்குலைப்பதாகும் என்று பிரிட்டிஷ் போலிசார் கூறியுள் ளனர். மான்செஸ்டர் தாக்குதல் தொடர் பில் குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணைத் தகவல் கசிந்திருப்பது குறித்து பிரிட்டிஷ் போலிசார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் நகரில் தாக்குதல் நடந்த இடத்தைப் பற்றிய புகைப் படங்களும் தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்ட வெடிகுண்டுப் படமும் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்துள்ளன. அமெரிக்காவும் பிரிட்டனும் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங் களில் ஒத்துழைத்து வரும் நட்பு நாடுகளாகும். இருந்தும் இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் விசாரணைத் தகவல்களை பகிர்ந்து கொள்ளப்போவதில்லை என்று பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்துள் ளனர். இதுபற்றி அமெரிக்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon