சுடச் சுடச் செய்திகள்

‘மதுக்கடைகளை மூடு; குடிநீர் கொடு’

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ‘மதுக்கடைகளை மூடு, குடிநீர் கொடு’ எனும் புதிய முழக்கம் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் கோவையில் உள்ள மதுக்கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கோவையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். படம்: தகவல் ஊடகம்